Home கலை உலகம் விஷால் மீது நடந்தது ஜிஎஸ்டி சோதனையில்லை!

விஷால் மீது நடந்தது ஜிஎஸ்டி சோதனையில்லை!

1147
0
SHARE
Ad

vishalசென்னை – இன்று மாலை நடிகர் விஷால் அலுவலகத்தில் நடந்தது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இலாகாவின் சோதனை என முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், உடனடியாக ஜிஎஸ்டி சென்னை இலாகாவின் நுண்ணறிவு (Intelligence) பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தங்களின் பிரிவு அதிகாரிகள் விஷாலுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் எதுவும் நடத்தவில்லை என அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றனர்.

அந்த அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

vishal-raid-statement

தான் முறையாக வருமான வரி செலுத்தும் நபர் என்பதால் இதுபோன்ற அதிரடி சோதனைகள் குறித்து அஞ்சப் போவதில்லை என்றும், எல்லா உள்நோக்க நடவடிக்கைகளுக்கும் எதிராக எதிர்த்துப் போராடத் தயார் என்றும் விஷால் சூளுரைத்துள்ளார்.