Home நாடு அன்வார் தான் பிரதமர் – அமனா தீர்மானம்!

அன்வார் தான் பிரதமர் – அமனா தீர்மானம்!

948
0
SHARE
Ad

????????????????????அலோர் ஸ்டார் – 14-வது பொதுத்தேர்தலில், எதிர்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் பதவியேற்க வேண்டும் என பார்ட்டி அமனா நெகாரா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

அமனா தேசிய மாநாட்டின் போது, ஜோகூர் அமனா பிரிவு, இந்தத் தீர்மானத்தை அறிவித்தது, அதற்கு எந்த ஒரு விவாதமும் இன்றி 898 பேராளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், தற்போது ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அன்வார் இப்ராகிம், தனது தண்டனைக் காலமோ அல்லது பொதுமன்னிப்போ பெற்று வெளியே வரும் வரையில் இடைக்காலப் பிரதமர் நியமனம் செய்யப்படுவார் என்ற தீர்மானத்தையும் அமனா உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice