Home இந்தியா பேரறிவாளன் மீண்டும் சிறையில்!

பேரறிவாளன் மீண்டும் சிறையில்!

791
0
SHARE
Ad

18-1392707767-perarivalan-600-jpgசென்னை – இரண்டு மாத கால தற்காலிக விடுதலை (பரோல்) இன்று செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து, ராஜிவ் காந்தி கொலைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

உடல் நலப் பரிசோதனைகளுக்குப் பின்னர் இன்று மாலை பேரறிவாளன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனது மகன் மீண்டும் சிறைக்கு செல்வது குறித்து தனக்கு வருத்தம் இருந்தாலும், அவரது விடுதலைக்கான தனது போராட்டம் தொடரும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.