சிங்கப்பூர் – உலகிலேயே சொந்தமாகக் கார் வைத்துப் பராமரிப்பதற்கு அதிக செலவாகும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், 2018 பிப்ரவரி மாதம் முதல், கார் உற்பத்தியைக் குறைக்க முடிவெடுத்திருக்கிறது.
சிங்கப்பூரின் நிலப்பற்றாக்குறை மற்றும் பொதுப்போக்குவரத்திற்கு செலவழிக்கப்பட்டிருக்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் காரணமாக சிங்கப்பூர் அரசு இம்முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.