சிட்னி – ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போர்ட் டாக்லஸ் என்ற பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் முதலைகளைப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் நீந்திய 4 ஆஸ்திரேலிய ஆடவர்களை ‘நூற்றாண்டின் முட்டாள்கள்’ என வர்ணித்திருக்கிறார் டாக்லஸ் மேயர் ஜூலியா லியூ.
கடந்த வாரம் தான், அந்த ஆற்றில் ஞாபக மறதி நோய் கொண்ட பெண் ஒருவர் விழுந்துவிட, அப்பெண்ணை முதலை ஒன்று கொன்றது.
இந்நிலையில், அந்த முதலை பிடிபட்டுவிட, அதே ஆற்றில் இருக்கும் இன்னும் சில முதலைகளைப் பிடிக்க அந்தக் கூண்டு வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதனை விளையாட்டாக எடுத்துக் கொண்ட நான்கு ஆஸ்திரேலிய ஆடவர்கள், அக்கூண்டுக்குள் சென்று நீந்தி அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கின்றனர்.