Home நாடு “இந்தியர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தியிருக்கும் வரவு செலவுத் திட்டம்” – டாக்டர் சுப்ரா விளக்கம்

“இந்தியர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தியிருக்கும் வரவு செலவுத் திட்டம்” – டாக்டர் சுப்ரா விளக்கம்

1121
0
SHARE
Ad
subra-press conf-budget-1-29102017
நேற்று ஞாயிற்றுக்கிழமை 29 அக்டோபர் 2017-இல் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ராவுடன் (இடமிருந்து) செடிக் தலைமை இயக்குநர் என்.எஸ்.இராஜேந்திரன், டத்தோ எம்.சரவணன், டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, சிலாங்கூர் மஇகாவின் செயலாளர் இரவிச்சந்திரன்…

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2018 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள், சலுகைகள் குறித்த விரிவான விளக்கங்களை மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29 அக்டோபர் 2017) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வழங்கினார்.

அந்த விளக்கங்கள் அடங்கிய முழு அறிக்கையையும் டாக்டர் சுப்ரா பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், இந்தியர்களின் நெடுநாளைய கோரிக்கைகளை நிறைவேற்றிய திட்டமாக இருந்தது என்பதோடு இந்திய சமுதாயத்தின் எதிர்கால வாழ்க்கையில் ஒளியேற்றி, வலுப்படுத்தியிருக்கும், திட்டமாகவும் திகழ்கிறது என டாக்டர் சுப்ரா அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

subra-press conf-budget-29102017
நேற்று பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்குக் கிடைக்கப் பெற்ற வாய்ப்புகள் குறித்த விளக்க அறிக்கை வெளியிட்டு டாக்டர் சுப்ரா உரையாற்றியபோது…
#TamilSchoolmychoice

இந்தியர் சமுதாயத்தின் ஏக்கமாக நீண்ட காலமாக இருந்து வந்த இரண்டு முக்கியக் கோரிக்கைகள் முதல் முறையாக நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, எழுத்துபூர்வ ஆவணமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

  • அதில் முதலாவது அரசாங்க பணிகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள் 7 சதவீதம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
  • இரண்டாவது உள்நாட்டு பொதுப் பல்கலைக் கழகங்களில் 7 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் பிரதமரின் அறிவிப்பு வழி வகுத்துள்ளது.

பொதுத் தேர்தல் தந்திரமல்ல

najib-presenting-budget-20182009-ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்ற பின்னர் ஒவ்வோர் ஆண்டும் இந்திய சமுதாயத்துக்கான சலுகைகளை வழங்கி வருகிறார் என்றும் இதனால், மலேசிய  இந்தியர் புளுபிரிண்ட் என்பது வெறும் தேர்தல் தந்திரம் அல்ல என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

1.5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டுத் திட்டம்

பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் மூலம் அமானா சாஹாம் 1மலேசியா எனப்படும் தலா ஒரு ரிங்கிட் மதிப்பிலான 1.5 பில்லியன் யூனிட் டிரஸ்ட் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன.

நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்று இதுவரை பங்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதில்லை என்றும் தெரிவித்த டாக்டர் சுப்ரா, பி-40 எனப்படும் நாட்டின் 40 சதவீத அடித்தட்டு மக்களில் தகுதி வாய்ந்த ஒரு இலட்சம் இந்தியர்களுக்கு அவர்கள் தலா 5,000 அமானா சஹாம் பங்குகளை வாங்குவதற்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படும் என்றும் இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 500 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எஸ்ஐடிஎப் சேவை மையங்கள் எண்ணிக்கை உயரும்

Budget2018-03இதற்கிடையில் நாடு முழுமையிலும் தற்போது செயல்பட்டு வரும் எஸ்ஐடிஎப் எனப்படும் இந்தியர்களுக்கான சேவை மையங்களின் எண்ணிக்கை நடப்பு 11 இலிருந்து 20 ஆக அடுத்தாண்டு உயர்த்தப்படும் என்றும் டாக்டர் சுப்ரா அறிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த வாய்ப்புகளையும், சலுகைகளையும் உருவாக்கித் தந்திருக்கும் நஜிப்பின் தேசிய முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகளை களத்தில் இறங்கி இந்திய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வோம் என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

2018 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கான வாய்ப்புகள், சலுகைகள் குறித்த விரிவான விளக்கங்ள் அடங்கிய முழு அறிக்கையை, டாக்டர் சுப்ராவின் தனிப்பட்ட இணைய மற்றும் குறுஞ்செயலித் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

http://drsubra.com/en/budget-2018-indian-community-drsubra-statement/