Home நாடு ரேலா வீரர்கள் மீது தாக்குதல்: ‘டத்தோஸ்ரீ’-க்கு 4 நாள் தடுப்புக் காவல்!

ரேலா வீரர்கள் மீது தாக்குதல்: ‘டத்தோஸ்ரீ’-க்கு 4 நாள் தடுப்புக் காவல்!

935
0
SHARE
Ad

assault rela remand four daysகோலாலம்பூர் – மக்கள் தன்னார்வப் படைப்பிரிவைச் (ரேலா) சேர்ந்த 3 வீரர்களை அடித்துக் காயப்படுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட 29 வயதான ‘டத்தோஸ்ரீ’ பட்டம் கொண்ட தொழிலதிபருக்கு நீதிமன்றம் 4 நாட்கள் தடுப்புக் காவல் விதித்திருக்கிறது.

நேற்று திங்கட்கிழமை மாலை அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைமையகத்திற்கு வந்த அவரை கைது செய்த அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

இதனையடுத்து, இன்று முதல் நான்கு நாட்கள் தடுப்புக் காவல் விசாரணை விதிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த வெள்ளிக்கிழமை, கம்போங் பாரு அம்பாங்கில் உள்ள கௌட் ஆங் யா வழிபாட்டுத்தலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ‘டத்தோஸ்ரீ’ தனது காரை வழிபாட்டுத்தலத்தின் முன் நிறுத்தியதாகவும், அப்போது ரேலா படையைச் சேர்ந்த 3 பேர் அவரது காரை அங்கிருந்து நகர்த்துமாறு கேட்டுக் கொண்ட போது ஆத்திரமடைந்த ‘டத்தோஸ்ரீ’ அவர்களைத் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.