Home நாடு 1எம்டிபி விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை: அபாண்டி அலி

1எம்டிபி விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை: அபாண்டி அலி

787
0
SHARE
Ad

1MDBகோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பான காவல்துறை விசாரணையில் இன்னும் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி தெரிவித்திருக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அபாண்டி அலி, “1எம்டிபி வழக்கு தூக்கி வீசப்பட்டுவிட்டதாகப் பேச்சுகள் நிலவுகின்றன. ஆனால் அது உண்மையில்லை. விசாரணை அறிக்கைகள் தொடர்ந்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும், சில இடங்களில் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே அதிகாரிகளை மேல் விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறோம்” என்று அபாண்டி அலி தெரிவித்தார்.