Home நாடு ஜாகிர் நாயக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்: சாஹிட்

ஜாகிர் நாயக்கை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்: சாஹிட்

774
0
SHARE
Ad

zakir-naik-with-zahid-hamidiகோலாலம்பூர் – பணமோசடி மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கி இந்தியாவால் தேடப்பட்டும் வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து பெற்றிருப்பதால், இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கு தஞ்சமடைந்திருக்கிறார்.

இந்நிலையில், ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

மலேசியாவில் ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தலையிலான 19 பேர் அடங்கிய குழு ஒன்று ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்றும் படி கூறி வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

தற்போது அந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள இந்தியா சட்டப்பூர்வ விசயங்களைக் கலந்தாலோசித்து வருகின்றது.

இதனிடையே, ஜாகிர் நாயக் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, “ஜாகிர் நாயக் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக மலேசியாவுக்குத் தெரிவிக்கவில்லை. என்றாலும், மலேசிய அரசாங்கம் ஜாகிர் நாயக்கின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வருகின்றது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தேசியப் பதிவிலாகாவில் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் முறைப்படி அவருக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்றும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.