Home நாடு மலேசியாவில் ஜாகிருக்கு எதிரான வழக்கில் இணைகிறது இந்தியா!

மலேசியாவில் ஜாகிருக்கு எதிரான வழக்கில் இணைகிறது இந்தியா!

1043
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – மலேசியாவில் நிரந்தரவசிப்பிட அந்தஸ்து பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற மலேசியாவைச் சேர்ந்த குழு ஒன்று தொடுத்திருக்கும் வழக்கில், இந்தியாவின் அமலாக்க இயக்குநரகமும் தன்னை இணைத்துக் கொள்ள யோசித்து வருகின்றது.

இந்தியாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் ஜாகிர் நாயக், இந்தியாவில் இருந்து தப்பித்து மலேசியா உட்பட இஸ்லாம் நாடுகளில் தஞ்சமடைந்தார்.

மலேசியா அவருக்கு நிரந்தர வசிப்பிட அந்தஸ்தும் வழங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்திய அமலாக்க இயக்குநரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியிருக்கும் தகவலில், “கடந்த ஏப்ரல் மாதம் முதல் மலேசியாவில் இருக்கும் ஜாகிர் நாயக், பல “அறிஞர்களுடன்” கலந்தாலோசித்து வருகின்றார்.

“மலேசியாவில் இருந்து ஜாகிர் நாயக்கை வெளியேற்றக் கோரி நடந்து வரும் வழக்கு ஒன்றில் அமலாக்க இயக்குநரகமும் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள சட்டப்பூர்வ ஆலோசனைகளைப் பெற்று வருகின்றது” என்று தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கிய ஜாகிர் நாயக், அதன் பின்னர் வங்காளதேசத்தின் டாக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு அவரது சொற்பொழிவு காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டிலும் சிக்கினார்.

இதனையடுத்து, இந்தியாவில் இருந்து தப்பித்து மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்தார்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம், மலேசியாவில் ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பொன்.வேதமூர்த்தி, வழக்கறிஞர் சித்தி காசிம் உள்ளிட்ட 19 பேர், ஜாகிர் நாயக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.

நாட்டின் பாதுகாப்பிற்கும், நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய ஜாகிர் நாயக்கை மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்க வேண்டும் என்று அந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.