ஆனால், அங்கு சினிமா நட்சத்திரங்களுடன் தன்னையும் ஒரு ஆளாக இணைத்துக் கொள்ள நினைத்து தனது குணத்தில் அவர் காட்டிய மாறுதல்கள் பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானார்.
அதன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜூலி, பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். என்றாலும், மக்கள் மனதில் பதிந்து போன அவரைப் பற்றிய எதிர்மறை எண்ணத்தை மாற்ற முடியவில்லை. போகும் இடங்களிலெல்லாம் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகினார்.
கலா மாஸ்டர் அந்த வாய்ப்பை ஜூலிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதோடு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களிடம் மீண்டும் நல்ல பெயரைப் பெற்றுக் கொள்ளும்படி ஜூலிக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இன்று செவ்வாய்க்கிழமை முதல் தொகுப்பாளராக ஜூலியைக் காணலாம்.