Home கலை உலகம் பிக் பாஸ்: ஜூலி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ்: ஜூலி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

1190
0
SHARE
Ad

Bigbossjulieசென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய, கமல்ஹாசன் முன்னின்று நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமையுடன் உடல் நலக் குறைவு காரணமாக நடிகை ஓவியா வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் வழக்கம்போல் ஒரு பங்கேற்பாளர் வாக்குகளின் மூலம் வெளியேற்றப்படவிருந்தார். அவ்வாறு வெளியேற்றப்பட பங்கேற்பாளர்களால் இந்த வாரம் வையாபுரி, ஓவியா, ஜூலி ஆகியோர் முன்மொழியப்பட்டிருந்தனர்.

bigg-boss-kamal-hassanஓவியா உடல் நலக் காரணங்களால் வெளியேறிவிட்ட காரணத்தால், எஞ்சியுள்ள வையாபுரி, ஜூலி இருவரில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

இவர்களில் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் இரசிகர்கள் அளித்த வாக்குகளின்படி ஜூலி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என கமல் அறிவித்தார்.