சிங்கப்பூர் – சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான (சபாநாயகர்) ஹலிமா யாக்கோப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சிங்கை அதிபராக ஹலிமா தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிங்கையில் அதிபர் பதவிக்கு சீனர், இந்தியர், மலாய்க்காரர் என மாறி மாறி வேட்பாளர்களை நிறுத்துவதை ஆளும் கட்சியான (மக்கள் செயல் கட்சி) பிஏபி பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகிறது.
ஒரு வழக்கறிஞரான ஹலிமா சட்டத்துறை வல்லுநர் என்பதோடு பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது தந்தையார் ஓர் இந்திய முஸ்லீம் ஆவார். இவரது தாயார் மலாய் பெண்மணியாவார்.
சிங்கை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் ஹலிமா பெறுவார்.