Home வணிகம்/தொழில் நுட்பம் செல்லினத்தின் திருக்குறள் உள்ளீடு ஐபோனிலும் சேர்க்கப்பட்டது!

செல்லினத்தின் திருக்குறள் உள்ளீடு ஐபோனிலும் சேர்க்கப்பட்டது!

1267
0
SHARE
Ad

thirukkuralதிருக்குறள் பாக்களையும் பழமொழிகளையும் எளிதாக உள்ளிடுவதற்கு, செல்லினம் வழங்கும் வசதியைப் பற்றி சிலர் அறிந்திருப்பர். செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் மட்டுமே இந்த வசதி இதுவரை இருந்து வந்தது. இன்று முதல் ஐ.ஓ.எசின் செல்லினத்திலும் இந்த வசதி சேர்க்கப்பட்டுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

Thirukkural-sellinam-article (3)ஆண்டிராய்டு செல்லினத்தைக் கொண்டு திருக்குறளின் முதல் சொல்லை எழுதியவுடனே, அடுத்தடுத்தச் சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருவதைப் பார்த்திருப்பீர்கள். அடுத்து வரவேண்டிய சொல், மேல்வரிசையில் தோன்றவில்லையெனில், நடுவில் உள்ள சொல்லை சற்று நேரம் அழுத்தி, முழுப்பட்டியலையும் பெறும் வசதியையும் பயன்படுத்தி இருப்பீர்கள். நடுவில் உள்ள சொல்லின் கீழ், மூன்று புள்ளிகளைக் கொண்டக் கோடு (…) இடப்பட்டிருக்கும். இதைத் தவிர, அடுத்தச் சொல்லின் முதல் எழுத்தைத் தட்டினாலும் பட்டியல் சுருங்கிவிடும். நமக்கு வேண்டிய சொல், முதல் வரிசையிலேயே தோன்றுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

இன்னும் இதனை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், முயன்று பாருங்களேன். புதிய பதிப்பினை தரவிரக்கம் செய்யத் தேவை இல்லை. செல்லினத்தின் 4.0ஆம் பதிப்பு முதல் இந்த வசதி இருந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

Thirukkural-sellinam-article (1)பழமொழிகள்

திருக்குறளை உள்ளிடுவது போலவே பழமொழிகளையும் செல்லினத்தின் வழி எளிமையாக உள்ளிடலாம்.

Thirukkural-sellinam-article (2)ஐ.ஓ.எசுக்கான திருக்குறள், பழமொழிகள் அடங்கிய சொற்பட்டியல்

ஆண்டிராய்டின் செல்லினத்தில் குறட்பாக்களில் வரும் சொற்களும் பழமொழிகளில் வரும் சொற்களும் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.ஓ.எசில் செல்லினத்தைப் பயன்படுத்துவோர் தற்போது இருக்கும் சொற்பட்டியலை நீக்கி, புதிய பட்டியலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். செல்லினத்தையே நீக்க வேண்டிய அவசியமில்லை. இதோ வழிமுறை:

  1. செல்லினத்தில் ஏற்கனவே உள்ள சொற்பட்டியலை மட்டும் முதலில் நீக்க வேண்டும்.
  2. மீண்டும் சொற்பட்டியலைத் தரவிறக்கம் செய்தால், புதிய சொற்பட்டியல் சேர்க்கப்படும்.
  3. புதிய சொற்பட்டியல் சேர்க்கப்பட்டதும், திருக்குறள், பழமொழிகளை எளிதாக உள்ளிடலாம்.

Thirukkural-sellinam-article (4)நன்றி – செல்லினம்