Home கலை உலகம் பிக்பாஸ்: ஜூலியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

பிக்பாஸ்: ஜூலியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

940
0
SHARE
Ad

Bigbossjulieசென்னை – பிக்பாஸ் நினைத்தது போலவே காயத்ரியும், ஓவியாவும் மனம்விட்டுப் பேசி ராசியாகிவிட, ஜூலி பாதுகாப்பற்ற உணர்விற்குத் தள்ளப்பட்டிருப்பது நேற்றைய எபிசோடில் அவரது நடவடிக்கைகள் மூலம் தெரிகின்றது.

முதற்கட்டமாக, சினேகன், சக்தி இருவரையும் தனது சாதுரியத்தால் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அவர்களை சிறுபிள்ளை போல் வம்பிழுத்து விளையாடுவது போன்ற சகஜ நிலைக்குத் தள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த வாரம் எலிமினேட் ஆகாமல் தப்பித்தால், அடுத்த வாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பதையும் ஜூலி சிந்திப்பது தெரிகின்றது.

#TamilSchoolmychoice

சினேகனிடம் பேசும் போது, தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகக் கூறுகிறார்.

எது எப்படியோ? ஜூலி கூறியது பொய் தான் என்பதை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்சும் இப்போது நம்பத் தொடங்கிவிட்டனர். ஜூலியின் தந்திர குணத்தையும் அவர்கள் உணர்ந்துவிட்டனர்.