Home வணிகம்/தொழில் நுட்பம் தவறுதலாக டிரம்ப்பின் டுவிட்டரை முடக்கிய டுவிட்டர் பணியாளர்!

தவறுதலாக டிரம்ப்பின் டுவிட்டரை முடக்கிய டுவிட்டர் பணியாளர்!

824
0
SHARE
Ad

donald-trumpவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கம் நேற்று வியாழக்கிழமை டுவிட்டர் பணியாளரால் தவறுதலாக முடக்கப்பட்டது.

சுமார் 11 நிமிடங்கள் முடக்கப்பட்டிருந்த டிரம்ப்பின் டுவிட்டர் பக்கம் பின்னர் மீண்டும் மீட்கப்பட்டது.

இது குறித்து டுவிட்டர் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “டுவிட்டர் வாடிக்கையாளர் ஆதரவு பணியாளர் ஒருவர், தனது பணியின் கடைசி நாள் அன்று இவ்வாறு செய்திருக்கிறார். இது குறித்து உள்விசாரணை நடத்தி வருகின்றோம். மேலும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு முறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றோம்” என்று டுவிட்டர் தெரிவித்திருக்கிறது.