Home இந்தியா கமலின் புதிய அரசியல் கட்சியின் முன்னோட்டமாக புதிய செயலி!

கமலின் புதிய அரசியல் கட்சியின் முன்னோட்டமாக புதிய செயலி!

1243
0
SHARE
Ad

kamalhassanசென்னை – நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்ட நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்குவதன் முன்னோட்டமாக நாளை நவம்பர் 7-ம் தேதி, புதிய செயலி ஒன்றை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யவிருக்கிறார்.

அச்செயலியின் பெயரும், செயல்முறை விளக்கங்களும் நாளை அறிமுக விழாவில் கூறப்படும் என்றும் கமல் தெரிவித்திருக்கிறார்.

சென்னை கேளம்பாக்கத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-வது ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது. அதில் பேசிய கமல், “அரசியல் கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டது. என்றாலும் அதனைப் படிப்படியாகத் தான் செய்ய முடியும். முதற்கட்டமாக இந்த செயலி அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. அரசியல் கட்சி தொடங்க பணம் தேவைப்படும் என்கிறார்கள். அதனை எனது ரசிகர்களே தருவார்கள்” என்று கமல் தெரிவித்தார்.