Home நாடு பினாங்கை அடுத்து சிலாங்கூரிலும் மோசமான வானிலை!

பினாங்கை அடுத்து சிலாங்கூரிலும் மோசமான வானிலை!

1604
0
SHARE
Ad

HIghtidesகோலாலம்பூர் – பினாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிலாங்கூரிலும் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சிலாங்கூரில் கிள்ளான், கோல சிலாங்கூர், கோல லங்காட், சபாக் பெர்ணாம், சிப்பாங் ஆகிய கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும், பெர்லிஸ், கெடா உட்பட தீபகற்ப மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் மோசமான வானிலை நிலவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.