Home உலகம் டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 26 பேர் மரணம்

டெக்சாஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 26 பேர் மரணம்

1025
0
SHARE
Ad

Texas_on_USAசதர்லாண்ட் (டெக்சாஸ், அமெரிக்கா) – இங்குள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை மாண்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

பர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச் என்ற தேவாலயத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவன் ஒரு வெள்ளைக்கார ஆண் என்றும், பின்னர் காவல் துறையினரால் துரத்திச் செல்லப்பட்ட அவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கிழக்கு வட்டார நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்தது.

#TamilSchoolmychoice

தற்போது ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.