Home கலை உலகம் திரைப்படமாகிறது மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு!

திரைப்படமாகிறது மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு!

924
0
SHARE
Ad

manmohan-singhபுதுடெல்லி – முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு, ‘தி ஆசிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் இந்தியில் திரைப்படமாக உருவாகிறது.

சுனில் போஹ்ரா தயாரிக்கும் இத்திரைப்படத்தை விஜய் ரத்னாகர் குட்டே என்பவர் இயக்குகிறார். மன்மோகன் சிங் பாத்திரத்தில் அனுபம்கெர் நடிக்கவிருக்கிறார்.

பாலிவுட்டில் ஏற்கனவே மகாகாந்தி, பகத்சிங், இந்திராகாந்தி, டெண்டுல்க்கர், தோனி என பல தியாகிகள், தலைவர்கள், பிரபலங்களுடைய வாழ்க்கை வரலாறு படமாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது மன்மோகன் சிங்கின் வாழ்க்கையும் திரைப்படமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.