Home நாடு ரோஹின்யாவுக்காக தற்காலிக மருத்துவமனை – மலேசியா நிதியுதவி!

ரோஹின்யாவுக்காக தற்காலிக மருத்துவமனை – மலேசியா நிதியுதவி!

803
0
SHARE
Ad

Najib-feature-கோலாலம்பூர் -வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான ரோஹின்யா மக்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனை ஒன்றை நிறுவ மலேசியா நிதியுதவி அளித்திருக்கிறது.

அம்மருத்துவமனை அடுத்த மாதம் தொடங்கி முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நஜிப், “திட்டமிட்டிருப்பதன் படி, வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் மருத்துவமனை முழுமையாகச் செயல்படத் தொடங்கும்” என்று தெரிவித்தார்.