கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டுமுயற்சியில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் நஜிப் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை தாசிக் கெலுகோரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நஜிப், “நீண்ட காலத்திற்கு யோசித்து, நீர்ப்பாசனம் மற்றும் வடிகாலமைப்பு துறையிடம் கலந்தாலோசித்து, இந்த 13 திட்டங்களை அடையாளம் கண்டிருக்கிறோம். இதற்கு 1 பில்லியன் ரிங்கிட் நிதி தேவைப்படுகின்றது”
“இப்போதைக்கு, கூட்டரசு அரசு 150 மில்லியன் ரிங்கிட்டுக்கு அனுமதியளித்திருக்கிறது. அதற்கு மேல் தேவைப்படும் கூடுதல் நிதியை அரசு அனுமதியளிக்கும்” என்று நஜிப் தெரிவித்தார்.