Home நாடு புதிய நிதி எதையும் பிரதமர் அறிவிக்கவில்லை – லிம் குவான் அறிவிப்பு!

புதிய நிதி எதையும் பிரதமர் அறிவிக்கவில்லை – லிம் குவான் அறிவிப்பு!

920
0
SHARE
Ad

lim guan eng-visit-tanjong bungah site-21102017ஜார்ஜ் டவுன் – பினாங்கில் ஏற்பட்ட வெள்ள நிலவரங்களைப் பார்வையிட நேற்று செவ்வாய்க்கிழமை இங்கு வருகை மேற்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் வெள்ள நிவாரணத்திற்காக  எத்தகைய புதிய நிதியையும் அறிவிக்கவில்லை என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மலேசிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  கடந்த ஐந்தாண்டுகளாக நிலுவையிலுள்ள 100 கோடி (1Billion) ரிங்கிட் பற்றி தீவிரமாகப் பரிசீலிப்பதாக மட்டுமே கூறியுள்ளார்.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள 15 கோடி ரிங்கிட் ஏற்கனவே கடந்தாண்டு அதாவது 08.11.2016 -ம் தேதி மூலப்பொருள் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனைடி பின் துவான்கு ஜஃபார் அறிவித்த தொகையாகும் என்று அவர் விளக்கப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

பிரதமரின் வருகைக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட லிம், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் சம்பவத்திற்கு பொருளாதார வழியாகவும் உடல் உழைப்பு ஒத்துழைப்புகளின் வழியாகவும் உதவிகளைப் புரிந்து வரும் அனைத்துத் தரப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மாநிலத்திலுள்ள துயர் துடைப்பு மையங்களில் 1284 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 5102 பேர் இன்னமும் தங்கியுள்ளனர்.மாநில அரசு தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைத் துப்புரவு செய்வதிலும் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமைத் தருவதிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

– க.மு.ஆய்தன்