கோலாலம்பூர் – டுவிட்டர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே 140 சொற்களுக்குள் மட்டுமே தகவல்கள் பகிர அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை இரு மடங்காக, அதாவது 280 சொற்களாக அதிகரித்திருக்கிறது டுவிட்டர் நிறுவனம்.
இன்னும் பெரும்பாலான டுவிட்டர் பயனர்கள், 140 அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளிலேயே டுவிட் (கீச்சிட்டு) வருவதாகவும், தற்போது செய்யப்பட்டிருக்கும் புதிய மேம்பாட்டால், டுவிட்டர் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, பயனர்கள் கீச்சிடுவதற்கு வசதியாகவும் இருக்கும் என்றும் டுவிட்டர் தெரிவித்திருக்கிறது.