Home வணிகம்/தொழில் நுட்பம் 6 வழித்தடங்களின் சேவையை நிறுத்தியது மாஸ்விங்ஸ்!

6 வழித்தடங்களின் சேவையை நிறுத்தியது மாஸ்விங்ஸ்!

1023
0
SHARE
Ad

Maswingsகோலாலம்பூர் – அடுத்த ஆண்டு முதல், மாஸ்விங்ஸ், சபா, சரவாக் உள்ளிட்ட 6 வழித்தடங்களில் தங்களது விமானச் சேவையை நிறுத்திக் கொள்ளவிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்திருக்கிறார்.

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம், செய்த ஆய்வுகளின் அடிப்படையில், இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் லியாவ் குறிப்பிட்டிருக்கிறார்.

கோத்தா கினபாலு – சண்டாகான், கோத்தா கினபாலு – தாவாவ், கோத்தா கினபாலு – மிரி, கூச்சிங் – மிரி, கூச்சிங் – கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் – சிபு ஆகியவை தான் அந்த 6 வழித்தடங்களாகும்.

#TamilSchoolmychoice

“நாங்கள் வர்த்தக விமானங்களிடம் அந்த 6 வழித்தடங்களை விட்டுவிட்டோம். மாஸ்விங்சால் அதனைத் தொடர முடியாது” என்றும் லியாவ் கூறினார்.