Home உலகம் பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி துறந்தார்

பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி துறந்தார்

1074
0
SHARE
Ad

Priti-Patel-UK MPஇலண்டன் – பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சராக பதவி வகித்து வந்த பிரித்தி பட்டேல் பிரதமர் தெரசா மே அமைச்சரவையிலிருந்து நேற்று புதன்கிழமை பதவி விலகியுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஓய்வு விடுமுறைக்காகத் தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருந்தபோது, அங்குள்ள அரசியல் மற்றும் வணிகத் தரகர்களையும், சந்தித்தார் என்றும் அப்போது வணிக விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன என்றும், அந்த சமயங்களில் அரசு அதிகாரிகளை அவர் தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.

இஸ்ரேல் அரசியல்வாதிகளுடன் இரகசிய சந்திப்புகளும் நடத்தினார் என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவில் இருந்த அவர் இலண்டனுக்கு வரவழைக்கப்பட்டு, பதவி விலக வற்புறுத்தப்பட்டார் என்றும் பிரிட்டனின் ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

தெரசா மே அமைச்சரவையிலிருந்து கடந்த ஒரே வாரத்தில் பதவி விலகும் இரண்டாவது அமைச்சர் பிரித்தி பட்டேல் ஆவார்.

இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய பகுதியான கோலான் பகுதிக்கு வருகை தந்த பிரித்தி பட்டேல், இஸ்ரேலுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இஸ்ரேல் இராணுவத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் வெளியிட்டிருந்தார்.