Home வணிகம்/தொழில் நுட்பம் மெய்யோடு எழுதுதல் : செல்லினத்தின் வசதி இனி ஐபோனிலும் கிடைக்கும்!

மெய்யோடு எழுதுதல் : செல்லினத்தின் வசதி இனி ஐபோனிலும் கிடைக்கும்!

1198
0
SHARE
Ad

sellinam-vowel-less-typing-மெய்யோடு எழுதுதல் – மெய் எழுத்துகளை மட்டும் தட்டி சொற்களை உள்ளிடும் வசதி. இது, 2015ஆம் ஆண்டு வெளிவந்த செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த வசதி இன்று செல்லினத்தின் ஐபோன் பதிகையிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

sellinam-vowel-less-typing-updateஅஞ்சல் விசைமுகத்தைப் பயன்படுத்துவோர், இந்த வசதியைக் கொண்டு விரைவாகவும் எழுத்துப் பிழைகளைப் பெரிதளவு நீக்கியும் எழுதலாம்.

எடுத்துக் காட்டாக, ‘பாண்டியன்’ எனும் பெயரை ப்ண்ட்ய்ன் (அஞ்சல்: pndyn) என்று எழுதினாலே போதும். நீங்கள் எழுத நினைக்கும் சொல்லைச் செல்லினம் கண்டெடுத்துப் பரிந்துரைப் பட்டியலில் காண்பிக்கும்.sellinam-vowel-less-typing-example

#TamilSchoolmychoice

மெய்யோடு எழுதுதல் : எழுத்துப்பிழைத் திருத்தம்

அஞ்சல் விசைமுகத்தில் உள்ள எழுத்துப் பிழைத் திருத்தங்களும் இந்த ‘மெய்யோடு எழுதுதல்’ வசதியில் சேர்க்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ‘மழைக்கால’ என்று எழுத ம்ல்க்க்ல் (அஞ்சல்: mlkkl) என்று எழுதினாலே போதும். மழைக்கால எனும் சொல் பட்டியலில் தோன்றி விடும். முதலில் எழுதப்பட்ட ‘ல்’ திருத்தப்பட்டு ‘ழ்’-ஆக மாற்றப்பட்டுள்ளதைக் காணலாம்.

விரைவான பரிந்துரைகள்

நீங்கள் எழுத விரும்பும் சொல் விரைவாகப் பரிந்துரைப் பட்டியலில் சேர, அவ்வப்போது உயிர் எழுத்துக்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, முதல் எழுத்தில் உயிர் சேர்ந்தால், கணிப்பு (prediction) விரைவாக்கப்படும். குறைவான எழுத்துகளைக் கொண்ட சொற்களுக்கும் இது பேருதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக: பேருதவி எனும் சொல்லை, பெர்த்வ் (அஞ்சல்: pertv) எனும் விசைகளைக் கொண்டு பெறலாம். இதில் பெ திருத்தப்பட்டு நெடிலாக்கப் பட்டுள்ளதைக் காண்க.

அடுத்தச் சொல் பரிந்துரை

மெய்யோடு எழுதுதல் வழி உள்ளிடப்பட்ட சொற்களை, வழக்கமாகத் தொடரும் அடுத்தச் சொற்களும் பரிந்துரைப் பட்டியலில் வழங்கப்படும். ய்க்வா (அஞ்சல்: ykvaa) என்று உள்ளிட்டு, பட்டியலில் தோன்றும் யாகாவா எனும் சொல்லைத் தட்டினாலே போதும், ‘யாகாவா ராயினும் …’ எனும் குறளை முழுமையாக பரிந்துரைகளைக் கொண்டே உள்ளிட்டுவிடலாம்.

விரைவாக உள்ளிடுவதற்குப் பல வழிகள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி விருப்பங்கள் இருப்பது இயல்பே. எது பழகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் எளிமையாக உள்ளதோ, அதைப் பயன்படுத்துங்கள்.

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
செல்லினமும் விரல்பழக்கம்!

நன்றி: செல்லினம்