Home நாடு “அன்வாருக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும்” – துணைப் பிரதமர் உறுதி

“அன்வாருக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும்” – துணைப் பிரதமர் உறுதி

720
0
SHARE
Ad

Anwar Prays at Father's funeralகோலாலம்பூர் – தோளில் ஏற்பட்ட காயம் தொடர்பாக கடந்த சில காலமாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் பிகேஆரின் நிரந்தரத் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான அன்வார் இப்ராகிமிற்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அமாட் சாஹிட் ஹாமிடி மக்களவையில் உறுதிக் கூறினார்.

நிபுணத்துவ மருத்துவர்களைக் கொண்டு அவருக்கு மருத்துவம் செய்யப்படும் என்று அவர் சொன்னார். கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த விபத்து ஒன்றில் அன்வாருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படிருக்கிறார். அவருக்கான அறுவைச் சிகிச்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

– மு.க.ஆய்தன்