Home கலை உலகம் நாடெங்கிலும் 22 திரையரங்குகளில் வெளியாகிறது ஜாங்கிரி!

நாடெங்கிலும் 22 திரையரங்குகளில் வெளியாகிறது ஜாங்கிரி!

1021
0
SHARE
Ad

Jhangrimovieகோலாலம்பூர் – நந்தினி கணேசன் தயாரிப்பில், கபிலன் பொலேந்திரன் இயக்கத்தில், விக்ரான், கே.கர்ணன், அகல்யா மணியம், குபேன் மகாதேவன், டாவியூ புவனன், சுகனேஸ்வரன், பாப்பா ஜான் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் நகைச்சுவைத் திரைப்படமான, ‘ஜாங்கிரி’ இன்று நவம்பர் 9, வியாழக்கிழமை முதல் நாடெங்கிலும் 22 திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் முழுவதும் கலகலப்பூட்டும் நகைச்சுவையுடன் கூடிய காதல், கதையினூடே நல்லதொரு சமூகக் கருத்து என சுமார் 2 மணி நேரங்கள் விறுவிறுப்பாகச் செல்லும் இத்திரைப்படம் குறித்து தற்போது நட்பு ஊடகங்களில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் மலேசியக் கலைஞர்கள், பொதுமக்களுக்காக ஒரு சிறப்புக் காட்சி ஒன்று திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவருமே படத்தில் இடம்பெற்றிருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் குறித்தும், நடிகர்களின் சிறந்த நடிப்பு குறித்தும், ஜித்திசின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் குறித்தும், மனம் திறந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

‘ஜாங்கிரி’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல்:

JHANGRI

ஜாங்கிரி முன்னோட்டம்: https://www.youtube.com/watch?v=aTDH9xt66U8

ஜாங்கிரி பாடல்கள்:  https://www.youtube.com/watch?v=Ts0F-TP1p7g

https://www.youtube.com/watch?v=3zpKJDDOO1U