Home உலகம் வடகொரிய எல்லையைப் பார்வையிடும் டிரம்ப்பின் திட்டம் கைவிடப்பட்டது!

வடகொரிய எல்லையைப் பார்வையிடும் டிரம்ப்பின் திட்டம் கைவிடப்பட்டது!

1242
0
SHARE
Ad

Donald trump- aeroplane-file pic-சியோல் – தனது தென்கொரியப் பயணத்தின் போது, வடகொரிய எல்லைக்கு இரகசியமாகச் செல்லத் திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோசமான வானிலை காரணமாகத் தனது பயணத்தை இரத்து செய்தார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

தென்கொரியாவுக்கு டிரம்ப் வருவதற்கு முன்பே, டிரம்ப் அங்கு செல்லமாட்டார் என்றும், அது ஒரு பேச்சுக்காகச் சொன்னதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

எனினும், நேற்று புதன்கிழமை காலை செய்தியாளர்கள் அனைவரும் டிரம்பு வருகையின் போது அழைக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அவர்களோடு, டிரம்பின் ஹெலிகாப்டர் வடகொரிய எல்லையை நோக்கிப் பறந்தது. எனினும் மோசமான வானிலை நிலவியதால், அங்கு செல்ல முடியவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.