Home இந்தியா ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமானவரி சோதனை

ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமானவரி சோதனை

896
0
SHARE
Ad

jaya tv-logo-சென்னை – (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) இன்று வியாழக்கிழமை காலை முதல் தமிழகத்தின் ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகளின் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜெயா தொலைக்காட்சி தவிர்த்து மேலும் 100 இடங்களில் வருமான வரி இலாகாவினர் ஒரே நேரத்தில் அதிரடியாக நுழைந்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடங்கள் அனைத்தும் தற்போது சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் தொடர்புடைய இல்லங்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகும்.

#TamilSchoolmychoice

ஊட்டியிலுள்ள கொடநாடு எஸ்டேட், நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம், தஞ்சையிலுள்ள சசிகலா உறவினர் டாக்டர் வெங்கடேஷ் இல்லம், மன்னார்குடியில் உள்ள தினகரன், திவாகரன் இல்லங்கள், ஆகிய இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சசிகலாவின் உறவினர்கள் இருக்கும் இல்லங்கள், அலுவலகங்கள், ஆகிய இடங்களில் ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்புப் படையினரின் உதவியோடு சோதனைகள் நடத்தப்படுகின்றன.