Home நாடு இளவரசர் சார்லஸ்- கமீலா தம்பதி பினாங்கிலிருந்து இந்தியா சென்றனர்!

இளவரசர் சார்லஸ்- கமீலா தம்பதி பினாங்கிலிருந்து இந்தியா சென்றனர்!

1131
0
SHARE
Ad

Prince charlesஜார்ஜ் டவுன் – 7 நாட்கள் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணமாக மலேசியா வந்திருந்த இளவரசர் சார்லசும், அவரது துணைவியார் கமீலாவும், நேற்று புதன்கிழமை தங்களது பயணத்தை நிறைவு செய்து, காலை 11 மணியளவில் மலேசியாவில் இருந்து பிரிட்டிஸ் அரச விமானப்படை விமானத்தில் இந்தியா சென்றனர்.

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று அவர்களுக்கு சிவப்புக் கம்பளத்துடன் கூடிய அரச மரியாதையோடு வழியனுப்பும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பிரிட்டனுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால நல்லுறவை அனுசரித்து இளவரசர் சார்லசும், இளவரசி கமீலாவும் கடந்த நவம்பர் 2-ம் தேதி மலேசியா வந்தனர்.

மலேசியாவில் கோலாலம்பூர், பேராக், பினாங்கு சரவாக் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.