புதுடெல்லி – நேற்று புதன்கிழமை காலை மலேசியாவில் இருந்து இந்தியா புறப்பட்ட பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதி, டெல்லி இந்திராகாந்தி அனைத்துலக விமானநிலையத்தை அடைந்தனர்.
விமானநிலையத்தில் அவர்களை வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்ட தலைவர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர், மாலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். பிரதமர் மோடி அவர்களிடம் பிரிட்டன் அரசி ராணி எலிசபெத்தின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இளவரசர் சார்லஸ்-கமீலா தம்பதி, இந்தியா செல்வதற்கு முன்னதாக மலேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.