நவம்பர் 4-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் மழை அபாய நிலையில் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்திருந்தது.
மாறாக புயல் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பது பற்றிய எத்தகைய தகவலையும் அது வெளியிடவில்லை.
இரவு 9.30 மணி என்பது எத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்வதற்கும் போதுமான கால அவகாசத்திற்குரிய நேரமல்ல.மாதத்திற்கு சராசரியாக 250 மிமி அளவில் மட்டும் பெய்யும் மழை, அன்றைய தினம் 15 மணி நேரத்தில் மட்டும் வட செபராங் பிறை வட்டாரத்தில் பதிவான மழையின் அளவு 372 மில்லி மீட்டராகும். இது வரலாறு காணாத அளவாகும். மற்ற இடங்களில் 250 மி்மீ அளவிலிருந்து 300 மி.மீ. வரை மழை பெய்திருந்தது.
எனவே இனியும் இத்தகைய சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க வானிலை ஆய்வு மையம் தனது சேவைத் தரத்தை மேம்படுத்துவதுடன் நவீனத் தொழில் நுட்பக் கருவிகளையும் காலத்திற்கு ஏற்ப தரம் உயர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வெள்ளப் பேரிடரில் மொத்தம் 7 உயிர்கள் பலியாயின.
-மு.க.ஆய்தன்