கோலாலம்பூர் – தீபகற்ப மலேசியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 16,453 மலைச்சரிவுகளில் 946 மலைச்சரிவுகள் மிக அபாய நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் (படம்) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் பினாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் எட்டு உயிர்கள் பலியான நிலையில் அமைச்சரின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவற்றில் 1551 மலைச்சரிவுகள் அபாய நிலையிலும், 2307 நடுத்தர நிலையிலும்,5122 குறைவான நிலையிலும்,6527 சரிவுகள் மிகக் குறைந்த அபாய நிலைகளைக் கொண்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மலைச்சரிவுகளைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் சீரமைக்கவுமானப் பணிகள் பியூஎஸ்பி எனப்படும் பிந்தாஸ் உத்தாமா சென்டிரியான் பெர்ஹாட் (Pintas Utama Sdn.Bhd) என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இது பற்றி விழிப்புணர்வுக் காணொளி (வீடியோ) அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களிடமும் வழங்கப்படுவதுடன் இது தொடர்பான அறிவிப்புகள் மலாய், ஆங்கிலம், தமிழ், சீன மொழிகளில் பரப்பப்படும் என்றும் அவர் சொன்னார்.
பொதுப்பணி அமைச்சின் கண்காணிப்புப் பணிகளுக்கு அனைத்து தரப்பின் உதவியும் நாடப்படும் என்றும் குறிப்பாக ஊராட்சித்துறையின் உதவி நாடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
– மு.க.ஆய்தன்