Home வணிகம்/தொழில் நுட்பம் டிஸ்னிலேண்ட்டில் பரவிய பாக்டீரியா: பலர் பாதிப்பு!

டிஸ்னிலேண்ட்டில் பரவிய பாக்டீரியா: பலர் பாதிப்பு!

835
0
SHARE
Ad

Paradise-Pier-Disneylandஅனாஹெயிம் (கலிபோர்னியா) – கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் பூங்காவில், உள்ள இரண்டு குளிரூட்டும் கோபுரங்களில் இருந்து பாக்டீரியாக்கள் பரவி பார்வையாளர்கள் பலருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

3 வாரங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 12-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு லெகியான்னரியஸ் என்ற தொற்று ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

சுமார் 54 வயது முதல் 94 வயது வரையிலானவர்கள் தான் இந்தப் பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, அந்நாட்டு சுகாதாரத்துறை நடத்திய சோதனையில் இரு குளிரூட்டும் கோபுரங்களில் இருந்து தான் அந்த பாக்டீரியாக்கள் பரவியிருப்பது கண்டறியப்பட்டவுடன் அதனை உடனடியாக அதிகாரிகள் மூடினர்.