Home கலை உலகம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவு: பிரகாஷ்ராஜ்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவு: பிரகாஷ்ராஜ்

969
0
SHARE
Ad

prakash raj,பெங்களூர் – நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில், நரேந்திர மோடி தன்னை விட சிறந்த நடிகர் என விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ்ராஜ் அதற்கு வழக்கு ஒன்றையும் சந்தித்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை, நடிகர் அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “நடிகர் அரசியலுக்கு வருவது நாட்டிற்குப் பேரழிவு. நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன்” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்திருக்கிறார்.