Home நாடு “ஜாகிர் நாயக் கண்காணிக்கப்படுகிறார்” – ஐஜிபி

“ஜாகிர் நாயக் கண்காணிக்கப்படுகிறார்” – ஐஜிபி

949
0
SHARE
Ad

Zakir Naikகோலாலம்பூர் – மலேசியாவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், காவல்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தேசியக் காவல்படைத் தலைவர் முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.

“நாங்கள் அவரது நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் கண்காணித்து வருகிறோம். நாட்டிற்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இருந்தால், எங்களுக்குத் தெரிந்துவிடும். காரணம், பாதுகாப்பு கவனத்தை அவர் உடனடியாக ஈர்த்துவிடுவார்” என்று முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.