Home உலகம் ஈரான், ஈராக் எல்லை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு!

ஈரான், ஈராக் எல்லை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு!

1009
0
SHARE
Ad

Earthquakeiraniraq12112017பாக்தாத் – ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சுமார் 1,700 பேர் காயமடைந்திருப்பதோடு, இடிபாடுகளில் சிக்கியிருக்கும் மேலும் பலரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.