Home இந்தியா நிர்பயா வழக்கு: மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படுகின்றது!

நிர்பயா வழக்கு: மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படுகின்றது!

1147
0
SHARE
Ad

nirbhayaபுதுடெல்லி – கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளில் ஒருவனான முகேஸ், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறான்.

அம்மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 3.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இவ்வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா மற்றும் முகேஸ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.