Home நாடு அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது!

அன்வாருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது!

882
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நேற்று காலை தொடங்கிய அறுவை சிகிச்சை மதியம் 1.30 மணியளவில் நிறைவடைந்தது.

அன்வாரின் குடும்பத்தினர் அளித்திருக்கும் தகவலின் படி, அன்வார் தற்போது நினைவு திரும்பியிருக்கிறார். என்றாலும் அவருக்கு வலி இன்னும் இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

2014-ம் ஆண்டு, கோலாலம்பூர் டேசா ஸ்ரீ ஹர்தாமசில் நடந்த விபத்தில் அன்வாருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.