ஜோர்ஜ் டவுன் – தனது தோழமை எதிர்க்கட்சி ஜசெக ஆளும் பினாங்கு மாநிலம் வெள்ளத்தில் தவிக்கிறது என்பதை அறிந்த சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கடந்த சனிக்கிழமை (11 நவம்பர் 2017) தனது சிலாங்கூர் மாநிலத்தின் மீட்புக் குழுவினருடன் பினாங்கு மாநிலத்திற்கு வருகை தந்து அம்மாநில முதல்வர் லிம் குவான் எங்கைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உடனடியாகக் களத்தில் இறங்கி உதவிப் பணிகளிலும் ஈடுபட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டபோது, ஓர் இடத்தில் மரம் ஒன்று விழுந்து கிடந்ததைக் கவனித்த அஸ்மின் அலி உடனடியாக மீட்புக் குழுவினருடன் அந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை தூய்மைப் படுத்தும் பணிகளிலும், சேதங்களை அப்புறப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டார். அஸ்மின் அலியோடு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் பினாங்குக்கு வருகை தந்தார்.

அஸ்மின் அலியின் பினாங்கு வருகை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர் உதவிப் பணிகளில் ஈடுபட்ட காட்சிகளை இங்கே காணலாம்:




[ngg_images source=”galleries” container_ids=”4″ override_thumbnail_settings=”0″ thumbnail_width=”240″ thumbnail_height=”160″ thumbnail_crop=”1″ images_per_page=”20″ number_of_columns=”0″ ajax_pagination=”0″ show_all_in_lightbox=”0″ use_imagebrowser_effect=”0″ show_slideshow_link=”1″ slideshow_link_text=”[Show slideshow]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″ display_type=”photocrati-nextgen_basic_thumbnails”]