கோலாலம்பூர் – நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக முன்னாள் வழக்கறிஞர் வி.கே.லிங்கத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை 6 மாத சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வழங்கப்படும்போது வி.கே.லிங்கம் நீதிமன்றத்தில் இல்லை.
நீதிபதி அபு சமா நோர்டின் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, முன்னாள் வழக்கறிஞருக்கு எதிராக இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் வாதாடிய மூத்த அரசு வழக்கறிஞர் அலிஸ் லோக், சம்பந்தப்பட்ட வழக்கின் மற்ற பிரதிவாதிகள் நீதிமன்றம் முன்வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில், லிங்கம் மட்டும் இன்னும் நீதிமன்றத்தின் முன் வரவில்லை என்பதால் அவருக்கு சிறைத்தண்டணை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
கியான் ஜூ கேன் தொழிற்சாலை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சிறுபான்மை பங்குதாரர்களான லிம் ஆ எங் (வயது 88) மற்றும் டோரிஸ் சீ சியூ லியான் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற அவமதிப்புக்காக தலா ஒரு இலட்சம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.