Home இந்தியா இவாங்கா பங்குபெறும் மாநாடு: 400 இடங்களுக்கு 44,000 பேர் போட்டி!

இவாங்கா பங்குபெறும் மாநாடு: 400 இடங்களுக்கு 44,000 பேர் போட்டி!

1067
0
SHARE
Ad

ivanka-ledeபுதுடெல்லி – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் பங்குபெறும், அனைத்துலகத் தொழிலதிபர்கள் மாநாட்டில், உலகளவில் இருந்து உச்சநிலை தலைமைச் செயலதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.

“மகளிர் முதலானவர்கள், அனைவருக்கும் நன்மை அளிக்கக்கூடியவர்கள்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா, அமெரிக்காவைச் சேர்ந்த உயர்நிலை பேராளர்களோடு இம்மாநாட்டில் பங்கேற்கிறார்.

வரும் நவம்பர் 28-ம் தேதி, இந்தியாவில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில் உள்ள 400 இடங்களுக்கு, இதுவரை சுமார் 44,000 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இம்மாநாட்டை ஏற்பாடு செய்யும் பொறுப்பு இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு ஏலம் விடப்பட்டது. அதில், ஐதராபாத் வெற்றிபெற்றிருக்கிறது.