Home நாடு ஜோங் நம்மிடம் 125,000 அமெரிக்க டாலர்கள் இருந்தன: கேஎல்ஐஏ 2 காவலர்

ஜோங் நம்மிடம் 125,000 அமெரிக்க டாலர்கள் இருந்தன: கேஎல்ஐஏ 2 காவலர்

955
0
SHARE
Ad

kimjongnamஷா ஆலம் – வடகொரிய அதிபரின் சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, மலேசியாவில் கொலை செய்யப்பட்ட போது, அவரிடம் கிட்டத்தட்ட 125,000 அமெரிக்க டாலர் (521,937.50 ரிங்கிட்) இருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் நீதிமன்ற விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

கேஎல்ஐஏ விமான நிலையத்தைச் சேர்ந்த காவலரான சம்சுல் பாஹ்ரின் அப்துல்லா கூறுகையில், ஜோங் நம்மிடம் இருந்து புத்ராஜெயா மருத்துவமனையைச் சேர்ந்த பணியாளர்கள் சுமார் 40 பொருட்களை கைப்பற்றியிருக்கின்றனர். அவற்றில் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டாலர்களும் இருந்தன என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஜோங் நம்மிடம் இருந்த டாலர்களின் மொத்த மதிப்பு 125,000 அமெரிக்க டாலர்கள் என நம்பப்படுகின்றது.

#TamilSchoolmychoice