Home நாடு அன்வாரைச் சந்தித்தார் துணைப் பிரதமர்!

அன்வாரைச் சந்தித்தார் துணைப் பிரதமர்!

1013
0
SHARE
Ad

anwar ibrahim-zahid hamidi-18112017கோலாலம்பூர் – தலைநகர் பொது மருத்துவமனையில் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை முடிந்து, தற்போது குணமடைந்து வரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை, பிரதமர் நஜிப் சந்தித்ததைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடியும் சனிக்கிழமை (18 நவம்பர் 2017) அன்வார் இப்ராகிமைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அன்வார் விரைவில் குணமடைவதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

தேசிய முன்னணியின் பரம அரசியல் வைரியாகக் கருதப்படும் அன்வார் இப்ராகிம், தற்போது ஒரு சிறைக் கைதியாக இருக்கும் நிலையில், பிரதமரும், துணைப் பிரதமரும் அடுத்தடுத்து அவரைச் சென்று சந்தித்து வருவது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதோடு, பல்வேறு ஆரூடங்களுக்கும் வழி வகுத்துள்ளது.