Home நாடு போன் பேசிக் கொண்டே கார் ஓட்டினால் 300 ரிங்கிட் அபராதம்: லியாவ்

போன் பேசிக் கொண்டே கார் ஓட்டினால் 300 ரிங்கிட் அபராதம்: லியாவ்

1011
0
SHARE
Ad

liow-tiong-laiகோலாலம்பூர்- சாலைகளில் வாகனங்களின் வேகத்தையும், சந்திப்புகளில் விதிமுறை மீறல்களையும் கண்டறிந்து அபராதம் விதிக்கும் கேமராக்கள் போல், இனி செல்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே கார் ஓட்டிச் செல்பவர்களைக் கண்டறிய புதிய கேமரா பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்திருக்கிறார்.

அவ்வாறு விதிமுறை மீறுபவர்களுக்கு உடனடியாக 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்றும் லியாவ் குறிப்பிட்டிருக்கிறார்.

சாலைகளில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கும், முன்னே செல்லும் வாகனங்களைப் பொறுத்து காரின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு வாகனமோட்டிகளுக்கு கவனம் மிக அவசியம் என்றும் லியாவ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.