Home உலகம் டிரம்ப் ஒரு குழப்பவாதி, மோசமான தலைவர் – மகாதீர் கருத்து!

டிரம்ப் ஒரு குழப்பவாதி, மோசமான தலைவர் – மகாதீர் கருத்து!

848
0
SHARE
Ad

Mahathir-Trumpகோலாலம்பூர் – அமெரிக்க அதிபர்களிலேயே டொனால்டு டிரம்ப் மிக மோசமான தலைவராக இருப்பதாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த தந்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மகாதீரிடம், டிரம்பின் தலைமைத்துவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த மகாதீர், “எப்பவுமே அமெரிக்க அதிபர்கள் தங்களின் பார்வைகளை உலகத்தின் மீது திணிக்க நினைப்பார்கள். அது மிகவும் தவறு. அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் நான் பார்த்த அதிபர்களிலேயே மிகவும் மோசமானவராகவும், குழப்பவாதியாகவும் இருக்கிறார். விரைவில் அவரது செயல்கள் பிடிக்காமல் அமெரிக்காவே அவரைக் கை கழுவிவிடும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.