ராஜஸ்தான் சித்தூரை ஆண்ட ராஜ புத்ர வம்ச ராணி பத்மினி வேடத்தில் தீபிகா நடித்திருக்கிறார்.
இந்நிலையில், பத்மினியின் கதாப்பாத்திரத்தை தவறாக இப்படம் சித்தரித்து விட்டதாக இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.
வரும் டிசம்பர் 1-ம் தேதி படம் வெளியாவதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், தீபிகா படுகோனை உயிரோடு எரித்தால், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஷத்ரிய மகாசபா திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இது சினிமா உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தீபிகா படுகோனே வீட்டில் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.