கிளந்தான் கோத்தா பாருவில் உள்ள அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அகமது சஃபி ஹூசாம் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு குறித்து இன்று புதன்கிழமை அகமட் சஃபி சார்பில் வழக்கு விசாரணைக் கோரப்பட்டது.
அகமட் சஃபி, அபாயகரமான போதை சட்டம் 1952, பிரிவு 39ஏ (1)-ன் கீழ், விசாரணை செய்யப்படவிருக்கிறார்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படலாம்.
படம்: நன்றி மலேசியாகினி
Comments